“துன்புறுத்தல் பற்றி பேசுபவர்களை ஒதுக்கி வைக்கும் மலையாள சினிமா” – வின்சி அலோசியஸ்.!
மலையாளத் திரையுலகில் கடுமையான ஆணாதிக்கம் இருப்பதை மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் விமர்சித்துள்ளார்
கேரளா : மலையாள திரையுலகின் நடிகைகளுக்கு நடக்கும் துன்புறுத்தல்கள் குறித்து வெளிச்சம் போட்டு காட்டிய ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தனக்கு சினிமா துறையில் எந்த பாலியல் தொல்லைகளையும் எதிர்கொள்ளவில்லை, ஆனால் சம்பளம் ரீதியாக பதிப்பாக்கப்பட்டதாக மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார்.
திரையுலகில் வந்து 5 ஆண்டுகள் ஆன பிறகும் தாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்றும், சம்பள விஷயத்தில் தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்கள் இருப்பதாகவும் நடிகை கூறினார்.
தனக்கு படத்தில் நடிப்பதற்காக பேசப்பட்ட தொகை வழங்கப்படவில்லை. பல படங்களுக்கு சம்பள ஒப்பந்தம் கூட பேசியதில்லை, அட்வான்ஸ் கூட வாங்காமல் படத்தில் நடிக்க வேண்டியது ஆயிற்று என்று வருத்தத்துடன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மலையாளத் திரையுலகில் பாலியல் சுரண்டல் அதிகமாக இருப்பதாகவும், வெளியே பேசுபவர்கள் திரையுலகை விட்டு ஓரங்கட்டப்படுகிறார்கள் அல்லது நடிப்பதற்கு குறைவான வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
இதனை பின்னணியில் இருக்கும் அதிகார குழு பற்றி எனக்கு தெரியாது. ஆனால் ஒப்பந்தம் இல்லாமல் படத்தில் நடிப்பது மிகவும் கடினம். சிலரின் ஈகோவால் படங்கள் நஷ்டமடைந்தது.
மலையாளத் திரையுலகில் உள்ள பாலின வேறுபாடுகள் சமமாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும், இதை உறுதி செய்ய அரசும், சம்பந்தப்பட்ட சங்கங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.