divya prabha Parvathy Thiruvothu [file image]
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று ஜனவரி 22 (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள்.
இந்நிலையில், மலையாளத் திரையுலக பிரபலங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையின் படங்களைத் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில், பார்வதி திருவோத்து, ரீமா கல்லிங்கல், திவ்ய பிரபா, ராஜேஷ் மாதவன், கனி குஸ்ருதி, இயக்குநர்கள் ஜியோ பேபி, ஆஷிக் அபு, கமல் கே.எம், குஞ்சிலா மாசில்லாமணி மற்றும் பாடகர் சூரஜ் சந்தோஷ் உள்ளிட்ட பல பிரபலமான மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் அரசியலமைப்பின் முகப்புரையின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.
வீட்ல கற்பூரம் ஏற்றவில்லை என்றால் நாம் தீவிரவாதிகள் – பா.ரஞ்சித் பரபர பேச்சு.!
இவர்களுடைய பதிவு சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் ” இந்திய மக்களாகிய நாங்கள், இந்தியாவை ஒரு இறையாண்மை, சோசலிஸ்ட், மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசாக உருவாக்குவதற்கும், அதன் அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பதற்கும் உறுதியுடன் தீர்மானித்துள்ளோம். நீதி, சமூக, பொருளாதார மற்றும் அரசியல்.
சிந்தனை, வெளிப்பாடு, நம்பிக்கை, நம்பிக்கை மற்றும் வழிபாட்டின் சுதந்திரம், அந்தஸ்து மற்றும் வாய்ப்பின் சமத்துவம் மற்றும் அவர்கள் அனைவருக்கும் மத்தியில் ஊக்குவித்தல்; சகோதரத்துவம் தனி மனிதனின் கண்ணியத்தையும், தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்துகிறது.
அரசியல் பேசுனா என்ன தப்பு? கீர்த்தி பாண்டியன் பேச்சு!
நமது அரசியலமைப்புச் சபையில், 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தி ஆறாவது நாள், இதன் மூலம் இந்த அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு, இயற்றி, நமக்கே வழங்குகிறோம்” என கூறப்பட்டுள்ளது. பல பிரபலங்களும் இந்த விழாவில் கலந்துகொண்டு இருக்கும் நிலையில், மலையாள பிரபலங்கள் இப்படி பதிவிட்டு இருப்பது பேசும்பொருளாகியுள்ளது. இவர்களுடைய பதிவுக்கு ஒரு பக்கம் பாராட்டுகளும் ஒரு பக்கம் எதிர்ப்புகளும் குவிந்து வருகிறது.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…