‘பகலில் ஒரு இரவு’ புகழ் நடிகர் ரவிக்குமார் காலமானார்.!

இவர் நூற்றுக்கும் மேற்பட்ட மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

Ravikumar - passes away

சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த தமிழ் மற்றும் மலையாள நடிகர் ரவிக்குமார் காலமானார். அவருக்கு 71 வயது. அவர் 1970கள் மற்றும் 1980களில் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நட்சத்திரமாக இருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று காலை ஒன்பது மணியளவில் உயிரிழந்தார் என்று அவர் மகன் கூறியிருக்கிறார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, நாளை இறுதிச் சடங்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

ரவிக்குமார்

ரவிக்குமார் தமிழில் அறிமுகமான கே. பாலசந்தரின் அவர்கள் (1977) படத்தில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் சுஜாதா உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தார். லக்ஷ்யபிரபு (1968) மூலம் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமான ரவிக்குமார், தனது நீண்ட திரையுலக வாழ்க்கையில் நூற்றுக்கணக்கான தென்னிந்திய படங்களில் நடித்திருக்கிறார். பிரபல இசையமைப்பாளர் ரவீந்திரன் ரவிக்குமாருக்கு தொடர்ந்து டப்பிங் பேசுவார். அவர் கடைசியாக ஆராட்டு மற்றும் சிபிஐ 5 படங்களில் நடித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Anbumani Ramadoss - Dr Ramadoss
RCB - IPL 2025
mk stalin
dominicanRepublic
Good Bad Ugly Review
PMK Leader Dr Ramadoss - Anbumani Ramadoss