பாலா சார் என்னை டார்ச்சர் பண்ணல…அந்தர் பல்டி அடித்த மலையாள நடிகை.!

Published by
கெளதம்

Mamitha Baiju: இயக்குனர் பாலா சார் என்கிட்ட ஸ்ட்ரிட்டாலாம் இல்ல, யாரோ பார்த்த தவறான வேலை இது. சூர்யா படத்துல இருந்து விலகுனதுக்கு இதுதான் காரணம் என்று வணங்கான் பட சர்ச்சைக்கு நடிகை மமிதா பைஜூ முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

READ MORE – இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!!

வணங்கான் படத்தில் நடித்து கொண்டிருந்த போது, இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக 22 வயாதான மலையாள நடிகை மமிதா பைஜூ, ஒரு பரபரப்பான தகவலை பகிர்ந்து கொண்டார். இதனையடுத்து, பிரேமலு படத்தின் மூலம் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று கொண்ட மமிதாவுக்கு ஆதரவு தெரிவித்து  சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் பேச தொடங்கினர். கடந்த இரு தினங்களாக இது பற்றி பெரும் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.

READ MORE – கணவர் கூட போனாலே ஏதாவது சொல்றாங்க! நடிகை ஸ்ரேயா சரண் வேதனை!

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மமிதா பைஜூ பேசிய காணொளி வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவு தொடங்கியது. இந்த நிலையில், இயக்குனர் பாலா தன்னை அடிக்கவில்லை என மமிதா பைஜூ தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது, ‘படப்பிடிப்பில் பாலா சார் மிக கவனமாக இருப்பார் என்பதை தான் நான் கூறினேன். அதில் இருந்து ஒரு வார்த்தையை எடுத்துக்கொண்டு தவறான தகவலை பரப்பியுள்ளார்கள்.

Mamitha Baiju [Image – Mamitha insta]

READ MORE – நாளை வெள்ளித்திரையில் களமிறங்க போகும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள்.!

படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன், புரொடக்‌ஷன் என ஒரு வருடத்திற்கு மேல் பாலா சாருடன் வேலை பார்த்திருக்கிறேன். நான் ஒரு சிறந்த நடிகையாக மாறுவதற்கு அவர் உதவி செய்தார். அந்தப் படத்தில் நான் பணிபுரிந்தபோது மனரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ எந்த விதமான துஷ்பிரயோகமான நடத்தையையும் நான் அனுபவிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். வணங்கானில் இருந்து விலக நான் மலையாளப்படத்தில் கமிட் ஆனதே காரணம், அதுபோல் நடிகர் சூர்யா சார் விலகுவதற்கு காரணம் கதை பிடிக்காமல் போய் இருக்கலாம்’ என இவ்வாறு கூறியுள்ளார்.

Recent Posts

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…

30 minutes ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (05/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர்,…

45 minutes ago

“புயலுக்கு இதுதான் தீர்வா? சுயநல ஆட்சியாளர்கள்..” அறிக்கையில் சீறிய விஜய்!

சென்னை : ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், ஆளும்…

53 minutes ago

சிறகடிக்க ஆசை சீரியல் – மீனாவிடம் உண்மையை உளறும் பார்வதி ..!

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [டிசம்பர் 4]எபிசோடில் மனோஜை பார்த்து கேலி செய்யும் குடும்பம்..  நீத்துவால் ரவி ஸ்ருதிக்கு…

2 hours ago

“உடனே விடுவிக்க வேண்டும்”..ஹமாஸ்க்கு டிரம்ப் எச்சரிக்கை! நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்!

வாஷிங்டன் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்தே இஸ்ரேல் -ஹமாஸ் போர் நடந்து வருவது இன்னும் முடிவுக்கு வராமல்…

2 hours ago

மகாராஷ்டிரா புதிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்!  ஏக்நாத் ஷிண்டேவுக்கு என்ன பொறுப்பு?

மும்பை : மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் கடந்தும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்ற…

2 hours ago