தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு மலையாள நடிகர் மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பிரபலங்கள் பலரும் அவருடைய மறைவுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், த்ரிஷா, குஷ்பு, விக்ரம், பாரதிராஜா, அருண் விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளனர். அவர்களை தொடர்ந்து விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலை தெரிவிக்கும் வகையில் நடிகர் விஷால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம்…வழிநெடுக மக்கள் கண்ணீர் அஞ்சலி.!
அந்த வகையில், தமிழ் சினிமாவை தாண்டி இவரது மறைவுக்கு, மலையாள நடிகர் மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில், “சிறந்த நடிகரும், நேர்மையான அரசியல்வாதியும், கனிவான மனிதருமான விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது இழப்பின் வலியைப் பகிர்ந்து கொள்ளும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…