Kazan Khan [File Image]
வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த பிரபல நடிகர் கசான் கான் இன்று காலமானார்.
பிரபல வில்லன் நடிகர் கசான் கான் மாரடைப்பு காரணமாக காலமானார். புரொடக்ஷன் கன்ட்ரோலர் என்.எம் பாதுஷா நடிகர் இறந்த செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது, இவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர் பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகர் மம்முட்டி மற்றும் சுரேஷ் கோபி நடித்த ஷாஜி கைலாஸ் திரைப்படமான ‘தி கிங்’ மற்றும் சிஐடி மூசாவில் பயங்கரவாதியாக நடித்த விக்ரம் கோர்படே போன்ற பாத்திரங்களள் மூலம் பிரபலமானார்.
தமிழ் சினிமாவில் 1992-ல் ‘செந்தமிழ்பாட்டு’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழில் சேதுபதி, ஐபிஎஸ், முறைமாமன், மேட்டுக்குடி, வல்லரசு, பிரியமானவளேஉள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…