தங்கலான் : பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் விக்ரம் மிகவும் கடினமாக உழைத்துள்ளார் என்றே சொல்லலாம். எனவே, கண்டிப்பாக படம் பெரிய அளவில் பேசப்பட்டு அவருக்கு வெற்றிப்படமாக அமையவேண்டும் எனவும் அவருடைய ரசிகர்கள் அவரும் காத்திருக்கிறார்கள்.
விக்ரம் போலவே இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனனும் தங்கலான் படத்தின் வெற்றிக்காக தான் காத்திருக்கிறார். ஏனென்றால், மாளவிகா மோகனன் சில படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானதை விட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டதன் காரணமாக தான் பிரபலமானார் என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் இன்னுமே இருந்து வருகிறது.
அந்த பேச்சுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தங்கலான் படத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரத்தை தேர்வு செய்து தனக்கு நன்றாக நடிக்க தெரியும் என காட்டுவார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த படத்தில் நடித்ததற்காக மாளவிகா மோகனன் சிலம்பம் கத்துக்கொண்டு நடித்தார்.
இதுமட்டுமின்றி இந்த படத்திற்காக நடிகை மாளவிகா மோகனன் தங்கலான் படத்திற்காக ரொம்பவே சிரமப்பட்டு இருக்கிறாராம். முதலில் லுக் வைத்து பார்க்கையில், தங்கலான் படத்தில் ஆர்த்தி கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என பா.ரஞ்சித் தேர்வு செய்துவிட்டாராம். ஆனாலும், லுக் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்கிறது.
இருப்பினும், படத்தில் அவர் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடிப்பாரா? என்ற யோசனையும் இருந்ததாம். முதலில் மாளவிகா மோகனன் சென்ற முதல் நாளே பெரிய ஸ்டண்ட் காட்சி ஒன்று தான் எடுக்கப்பட்டதாம். முதலில் மாளவிகா மோகனனால் அந்த காட்சியில் நடிக்கவே முடியவில்லையாம். தொடர்ச்சியாக அந்த நாள் முழுவதும் காட்சி எடுக்கப்பட்டு கொண்டு இருந்ததாம்.
சிலம்பம் சுத்தும் காட்சி எல்லாம் சரியாக வரவில்லை என்பதால் தொடர்ச்சியாகவே அந்த காட்சியில் மாளவிகா மோகனன் நடித்தாராம். தொடர்ச்சியாக அப்படி நடித்த காரணத்தால் அவருடைய கை மிகவும் பெரிதாக வீங்கி விட்டதாம். இதனால் முடியவில்லை என மாளவிகா மோகனன் கண் கலங்கி அழுதாராம். இருப்பினும் காட்சியை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ச்சியாக நடித்து கொடுத்தாராம். இந்த தகவலை இயக்குனர் பா.ரஞ்சித் ‘தங்கலான் படத்திற்காக மாளவிகா மோகனனை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்’ என யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…