படம் எடுக்குறது ஒன்னும் ஜோக் இல்ல…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ‘வாரிசு’ இயக்குனர்.!
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. தில் ராஜு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் ரசிகர்ளுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும்நிலையில், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாக படம் வெளியான 5 நாட்களில் 150 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு பக்கம் படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வந்தாலும், சிலர் படத்தை பற்றி எதிர்மறையான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். இந்த நிலையில், அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இயக்குனர் வம்சி சமீபத்திய பேட்டி ஒன்றில் படம் எடுக்குறது ஒன்னும் ஜோக் கிடையாது என பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய இயக்குனர் வம்சி ” இப்போதெல்லாம் ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? ஒரு படத்திற்காக எத்தனை பேர் உழைக்கிறார்கள் தெரியுமா..? படம் எடுப்பது ஒன்னும் ஜோக் இல்ல. இயக்குனர்கள் பல தியாகங்களை செய்கிறார்கள். பலரும் ஒரு படத்தை எடுக்க கடினமாக உழைக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.