கூப்பிட்டு வச்சு அசிங்க படுத்திட்டாங்க! நடிகை மஹிமா நம்பியார் வேதனை!

mahima nambiar

தமிழ் சினிமாவில் சட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மஹிமா நம்பியார். இவர் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23, அண்ணாதுரை, மதுரராஜா, மகாமுனி உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். இவர் நடித்த படங்களும் இவருக்கு வெற்றியை கொடுத்தது என்றே சொல்லலாம்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மஹிமா நம்பியார் தன்னுடைய வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் என்னுடைய சினிமா வாழ்க்கையில் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். அதில் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்றால் நான் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் ஒரு நடிகருக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆனேன்.

நடிக்க கமிட் ஆகி அந்த படத்திற்கான படப்பிடிப்பு 4 நாட்கள் நடந்தது. அதன் பிறகு சில நாட்கள் கழித்து படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என மேனஜர் ஒருவர் என்னிடம் கூறினார். நானும் சில நாட்களுக்கு பிறகு அவரிடம் பேசினேன் அப்போது அவர் இந்த படத்தில் இருந்து உங்களை தூக்கிட்டாங்க உங்களுக்கு பதில் வேறொரு நடிகையை நடிக்க கமிட் செய்து இருக்கிறார்கள் என கூறினார்.

பிக் பாஸ் பாக்கவே ரொம்ப போர் அடிக்கு! நடிகை ஷகீலா ஓபன் டாக்!

இதனை கேட்டவுடன் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களே நடிக்க அழைத்தார்கள் பிறகு ஏமாற்றி அவமானபடுத்திவிட்டார்கள். இதனை தான் என்னுடைய சினிமா வாழ்க்கையில் நான் மறக்கவே மாட்டேன்” என மஹிமா நம்பியார் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” சினிமாவில் பல நடிகைகள் தங்களுக்கு எதிராக நடந்த சம்பவங்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.

ஆனால், அவர்களுடைய போராட்டத்திற்கு எந்த பலனும் இதுவரை சரியாக கிடைத்து நான் பார்க்கவில்லை”  எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நடிகை மஹிமா நம்பியார் கடைசியாக சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மலையாளத்தில் ஜெய் கணேஷ் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pradeep ranganathan dragon AJITH
tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi