மகாராஜா டிரைலர் : விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள அவருடைய 50-வது படமான மகாராஜா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இருக்கும் திரைப்படம் தான் ‘மகாராஜா’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பது இது தான் 50-வது படம் என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது என்றே கூறலாம். படத்தில், நட்டி, முனிஷ்காந்த், அனுராக் காஷ்யப், பி.எல்.தேனப்பன், சிங்கம் புலி, பாரதிராஜா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது படத்திற்கான டிரைலர் வெளியாகி இருக்கிறது. ட்ரைலரில் வரும் காட்சிகள் மற்றும் வசனங்கள் எல்லாம் மிகவும் மிரட்டலாக இருக்கிறது.
குறிப்பாக அப்பாவி போல இருக்கும் விஜய் சேதுபதி கடைசி காட்சியில் கத்தியுடன் வருவது மற்றும் அனுராக் காஷ்யப் வரும் காட்சிகள் பார்ப்பதற்கு த்ரில்லிங் ஆக இருக்கிறது. அத்துடன் டிரைலரில் வரும் பின்னணி இசையும் துல்லியமாக இருப்பதால் ட்ரைலர் மக்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது என்றே சொல்லலாம்.
எனவே, வெளியாகி இருக்கும் ‘மகாராஜா’ ட்ரைலரை பார்த்த பலரும் படத்திற்கு ஆவலுடன் காத்து இருப்பதாகவும், படம் கண்டிப்பாக மிகப்பெரிய ஹிட் படமாக விஜய் சேதுபதிக்கு அமைய போகிறது என்றும் தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…