ஹிந்தியில் உருவாகும் ‘மகாராஜா’! ஹீரோவாக நடிக்கப்போவது யாரு தெரியுமா?

மகாராஜா : பொதுவாகவே சினிமாவில் ஒரு மொழியில் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகிவிட்டது என்றாலே அந்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது உண்டு. அப்படி தான், தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான அவருடைய 50-வது படமான ‘மகாராஜா’ படம் ஹந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழில் வெளியான இந்த திரைப்படத்தினை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கி இருந்தார். படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, மந்தா மோகன்தாஸ், சிங்கம்புலி, நடராஜன் சுப்ரமணியம், வினோத் சாகர், பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இன்னும் சில திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கிறது. வசூல் ரீதியாக படம் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என ஹிந்தியில் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.
இருப்பினும், இந்த படத்தினை யார் இயக்கப்போகிறார் படத்தில் அமீர்கானுடன் யாரெல்லாம் நடிக்கப்போகிறார்கள் என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை. படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்போது அதற்கான அறிவிப்பும் சேர்ந்து வரும் என கூறப்படுகிறது. அமீர்கான் தற்போது “சிதாரே ஜமீன் பர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு மகாராஜா ஹிந்தி ரீமேக்கில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025