Maharaja ON OTT [File Image]
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ம் தேதி வெளியான “மகாராஜா” திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அவரது 50வது படத்தைக் குறிக்கும் வகையில், இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது.
விஜய் சேதுபதி கேரியரில் அவர் ஹீரோவாக நடித்து இந்த படம் முதல் முறையாக ரூ.100 கோடி கடந்து வசூல் செய்திருக்கிறது. இந்த ஆண்டு அரண்மனை 4 படத்திற்கு பிறகு, ரூ.100 கோடி வசூல் செய்த படம் என்றே பெருமையும் ‘மகாராஜா’ விற்கே சேரும்.
இவ்வாறு, சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் திருப்பங்களுடன் எடுத்து செல்லும் விதம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. இப்போது, இந்தி, தமிழ், தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை (ஜூலை 12) வெளியாகவுள்ளது.
இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி (நட்ராஜ்), பாரதிராஜா, அபிராம், சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், வினோத் சாகர், பாய்ஸ் மணிகண்டன், கல்கி, சச்சனா நிமிதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சுதன் பாலன், ஜய்சம் ஆகியோர் தயாரிக்க, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…
சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…