மதுரை அஜித் ரசிகர்கள் சிலர், அஜித்குமாரை பகத் சிங் போல சித்தரித்து வலிமையையும், வரலாறும் அழியாது என்ற வாசகங்களோடு கட்டவுட் வைத்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகராக வளர்ந்துவிட்டவர் நடிகர் அஜித். இவரது ரசிகர்கள் இவர் படம் வெளிவந்தாலே போதும் என கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். அஜித் தனது ரசிகர் மன்றங்களை களைத்து கிட்டத்தட்ட 10 வருடங்காகிவிட்டது.
இருந்தும் தற்போது வரையில் அஜித் திரைப்படம் வெளியானால் திரையரங்கில் திருவிழா கோலம் தான். கட்டவுட், போஸ்டர், முதல் நாள் முதல் காட்சி என அதகளப்படுத்திவிடுவர்.
அதே போல சில ரசிகர்கள் கொஞ்சம் எல்லை மீறி தங்களது அன்பை வெளிக்காட்டுவதாக எண்ணி சர்ச்சை போஸ்டர்களை ஒட்டிவிடுவர். இதனையும் ஒரு காரணமாக எண்ணி தானோ என்னவோ தனது ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டார் போலும் அஜித்.
இருந்தாலும், அவரது ரசிகர்கள் விடுவதாயில்லை. மதுரையில், அண்மையில் ஒட்டப்பட்ட போஸ்டரை கண்டு திரையுலகினர் அதிர்ச்சியடைந்துவிட்டனர். அதில் அஜித்குமாரை சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் போல சித்தரித்து, அதில், ‘வருடங்கள் கடந்தாலும் வலிமையையும், வரலாறும் அழியாது.’ என வாசகம் அச்சிட்டுள்ளனர். அடங்காத அஜித் குரூப்ஸ் – மதுரை. என அதில் போடப்பட்டுள்ளது.
சென்னை : அம்மா என அதிமுகவினரால் அன்பாக அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று. மறைந்து விட்டாலும்,…
சென்னை : அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில், டோமலபெண்டா…
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…