விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்.!
விஜய் சேதுபதி, கீர்த்தி ஷெட்டி, வைஷ்ணவ் தேஜ், உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் உப்பெனா. இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றதால் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
தமிழில் உருவாகும் அந்த படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் விஜய் சேதுபதி வாங்கியதாகவும் தகவல்கள் வெளியானது. இதனையடித்து உப்பெனா படத்தின் கதை திருடப்பட்டு உருவாக்கப்பட்டதாகவும், அது தன்னுடைய கதை என்றும், தேனியைச் சேர்ந்த உதவி இயக்குனர் எஸ்.யூ.டல்ஹவுசி பிரபு மனு அளித்திருந்தார்.
இதையும் படியுங்களேன்- என் புருஷன் எனக்கு மட்டும் தான் என எதிர்பார்த்தேன்….விவாகரத்து குறித்து மனம் திறந்த சீதா.!
எனவே, இந்த திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று அறிவிக்க வேண்டும் என்றும், படத்தின் வசூல் மூலம் வந்த லாபத்தில் 50 % கொடுக்கவேண்டும் என்றும், தமிழ் இந்த திரைப்படத்தை ரீமேக்கை செய்யப்போகும் விஜய் சேதுபதி பட நிறுவனம் தயாரிக்க தடை விதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், தமிழில் உப்பெனா படத்தின் ரீமேக்கை தான் வாங்கவில்லை என்று விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். இதனையடுத்து, விஜய் சேதுபதியின் விளக்கத்தை ஏற்று வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததுள்ளது.