மீண்டும் மீண்டுமா? இழுத்தடிக்கும் ரிலீஸ்… பிசாசு-2 படத்தை வெளியிட தடை நீடிப்பு.!

'பிசாசு 2'ஓகே திரைப்படத்தை வெளியிட விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல் ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில், படத்தை வெளியிட விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பு பிரச்னை உள்ளிட்ட பல காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய் கொண்டே செல்கிறது. அதாவது, ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம், ‘பிசாசு 2’ படத்தை தயாரிப்பதற்கு முன்பு, ‘இரண்டாம் குத்து’ படத்தின் விநியோக உரிமையை பெற்றிருந்தது. அப்பொழுது, பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் உடனான ஒப்பந்தப்படி, 4.85 கோடியில் பாக்கி வைத்துள்ளது.

இதனால், இந்த தொகையை தங்களுக்கு கொடுத்துவிட்டு தான் படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என்று பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு ஒன்றை அண்மையில் தொடர்ந்தது. அப்பொழுது, இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாக்கி இருக்கும் ரூபாயை வழங்க ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம், ஃபிளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு தரவேண்டிய ரூ.1.17 கோடி பணத்தை கொடுக்காமலேயே ரிலீஸ் தேதி (மார்ச் 2025) அறிவிக்கப்பட்டதால் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “ஏற்கனவே படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தும், படத்தை வரும் மார்ச் மாதம் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ‘இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது’ எனக் கூறினார்.

இதையடுத்து, ‘பிசாசு 2’ விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் எனவும், இந்த வழக்கில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 21 தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்