போஸ்டரில் கூட வர மாட்டேன்னு சொன்னாங்க! பிரேமம் குறித்து உண்மையை உடைத்த மடோனா!

madonna sebastian

Madonna Sebastian : பிரேமம் படத்தில் நடித்தபோது போஸ்டரில் கூட வரமாட்டீர்கள் என்று படக்குழு கூறியதாக மடோனா செபாஸ்டியன் தெரிவித்துள்ளார்.

பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். பிரேமம் படம் மலையாள படம் என்றாலும் கூட எல்லா மொழிகளில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக எல்லா மொழிகளில் இருந்தும் நடிகை மடோனா செபாஸ்டியனுக்கு வரவேற்பு கிடைத்தது என்றே கூறலாம்.

இந்த படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பின் காரணமாக நடிகை மடோனா செபாஸ்டியன் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார் என்றே கூறலாம். கடைசியாக தமிழில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக சிறிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, சில படங்களில் நடிக்கவும் நடிகை மடோனா செபாஸ்டியன் கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மடோனா செபாஸ்டியன் சினிமாவுக்கு வந்து தான் பல விஷயங்களை கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய மடோனா செபாஸ்டியன் ” எனக்கு சினிமா பல விஷயங்களை கற்றுக்கொடுத்து இருக்கிறது.

என்னுடைய முதல் படமான பிரேமம் படத்தில் நான் நடித்த போது அந்த படத்தினுடைய பேனரில் கூட நான் இடம்பெற மாட்டேன் என்று பட படக்குழுவினர் கூறினார்கள். ஆனால், என்னுடைய கதாபாத்திரத்தின் மீது எனக்கு ரொம்பவே நம்பிக்கை இருந்தது. எனவே, நான் அந்த படத்தில் நடித்தேன். போஸ்டரில் இடம்பெறவில்லை என்றாலும் கூட அந்த கதாபாத்திரத்திற்கு எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்து பலருடைய மனதில் இடம்பெற்றேன்.

அதைப்போலவே, லியோ படத்திலும் எனக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை என்றாலும் கூட போஸ்டர்களில் நான் இடம்பெறவில்லை என்றாலும் கூட என்னுடைய கதாபாத்திரம் மக்களுக்கு ரொம்பவே பிடித்து இருந்ததாக நான் நினைக்கிறேன். எனக்கு அந்த படத்திலும் நடித்த பிறகு நல்ல வரவேற்பு மக்களிடம் இருந்து கிடைத்து இருக்கிறது.

இசைத்துறையில் நுழைந்து எதாவது சாதிக்க வேண்டும் என்று தான் சினிமாவிற்கு வந்தேன். பிறகு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட நான் 8-ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். இந்த 8-ஆண்டுகளில் ஒரு வேலைக்காக எந்த அளவுக்கு நம்மளை அர்ப்பணித்து கொள்ளவேண்டும் என்பதனை கற்றுக்கொண்டேன். இன்னுமே பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்” எனவும் நடிகை மடோனா செபாஸ்டியன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்