“முகுந்த் வரதராஜன் பிராமணர்னு காட்ட துப்பில்ல”…ஆவேசமாக பேசிய மதுவந்தி!
இப்படி பேசியதால் எனக்கு சினிமா வாய்ப்புகள் தடை பட்டாலும் கவலையில்லை என நடிகை மதுவந்தி கோபத்துடன் பேசியுள்ளார்.
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள அமரன் திரைப்படம் மக்களுக்கு மதில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு பக்கம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், மற்றோரு பக்கம் படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றை வைத்து மேஜர் முகுந்த் வரதராஜன் சமூகம் என்னவென்பது மறைக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
படத்தில், சிவகார்த்திகேயன் அப்பாவை அப்பா என்று அழைக்காமல் நைனா என்று அழைப்பது போல காட்சி ஒன்று இருந்தது. அந்த காட்சியை பார்த்துவிட்டு அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத்தின் துணைத் தலைவர் தியாகராஜன் ” படத்தில் அவருடைய சமூகம் என்னவென்பது மறைக்கப்பட்டுள்ளது ஒரு வீரருடைய உண்மையான கதையை, திராவிட இயக்க கண்ணோட்டத்தில் பார்ப்பது அவருடைய பின்னணியையும் உண்மையான குணத்தையும் புறக்கணிப்பதற்கு சமம் என குற்றம் சாட்டியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இதற்கு தன்னுடைய விளக்கத்தை கொடுத்திருந்தார். அமரன் வெற்றி விழாவில் பேசிய அவர் ” மேஜர் முகுந்த், தன்னை இந்தியர் என்று சொல்லிக்கவே ஆசைப்படுவார், தனது சான்றிதழில் கூட எந்த குறியீடும் இருக்கக்கூடாது என நினைப்பார். எனவே அவருக்கு ‘இந்தியன்’, ‘தமிழன்’ என்ற அடையாளத்தை மட்டுமே இந்த படத்தில் கொடுங்கள் என அவரின் குடும்பத்தார் என்னிடம் கேட்டுக்கொண்டனர்” என தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில், பிரபல நடிகையான மதுவந்தி படத்தில் முகுந்த் வரதராஜன் பிராமணர் சமூகத்தை சேர்ந்ததை கட்ட என்ன பயம் என கேள்வி எழுப்பி பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “ஒரு படம் எடுத்தா அவர் ஒரு சமுதாயத்துல இருந்து வாராருன்னா அந்த சமுதாயத்தை சித்தரிக்க முதலில் தைரியம் இருக்கணும் அத பண்ண இங்க யாருக்கும் துப்பு இல்ல.
அவ்ளோ பெரிய ஆர்மி வீரர் பத்தி படம் எடுக்குறாங்க அவர் பிராமணர்னு காட்ட உங்களுக்கு என்ன? யாரை பாத்து பயப்படுறீங்க? சினிமா துறைல இருந்துட்டு இந்த கேள்விய நான் கேக்குறேன், இதனால பட வாய்ப்பு வரலனா கூட எனக்கு கவலை இல்ல. முகுந்த் வரதராஜன் பிராமணர்னு காட்ட உங்களுக்கு என்னங்க பிரச்சினை?” என காட்டத்துடன் கேள்விகளை முன் வைத்தார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் இதற்கு தான் இயக்குநர் பதில் கூறிவிட்டார் பின்பு எதற்காக இப்படி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.