Madhoo about simran petta [File Image]
சினிமா துறையில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் நடித்து பிரபலமான நடிகைகளுக்கு இந்த காலத்தில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. அதிலும் சில நடிகைகளுக்கு பட வாய்ப்புகளை சுத்தமாக இல்லாமல் இருக்கிறார்கள்.
தங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் பல நடிகைகள் வேதனையுடனும் பேசுவது உண்டு. குறிப்பாக ரேகா கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார். வரை தொடர்ந்து ரோஜா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை மதுபாலா சமீபத்திய பேட்டி ஒன்றில் பட வாய்ப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
வெற்றிநடை போடும் ஜோ! இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?
இது குறித்து பேசிய நடிகை மதுபாலா ” எனக்கு சினிமாவில் நடிக்க மிகவும் ஆசை இருக்கிறது. பட வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். நான் அந்த காலத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் ரஜினி சார் கூட நடிக்கவில்லையே என்ற ஒரு வருத்தம் எனக்குள் இருக்கிறது. ஏனென்றால், நான் அந்த காலத்தில் இருந்து சினிமாவில் இருந்து வருகிறேன். ஹிந்தி, தெலுங்கில் நான் நடித்திருந்தாலும் ரஜினிகூட ஒரு படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.
கடைசியாக ரஜினிகாந்திற்கு ஜோடியாக சிம்ரன் ஒரு படத்தில் நடித்திருந்தார். அதாவது பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். அவருடைய கதாபாத்திரம் எல்லாம் நன்றாக இருந்தது ஆனால், அவரே ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும்போது நான் நடிக்க கூடாதா? அவருக்கு கிடைத்த அந்த கதாபாத்திரம் எனக்கு கிடைக்கவில்லை ஏனென்றால் நாங்கள் இருவரும் ஒரே காலத்தில் நடித்தவர்கள். எனவே எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறது” என நடிகை மதுபாலா தெரிவித்துள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…