சினிமாத்துறையில் இருக்கும் நடிகைகளுக்கு மறக்க முடியாத வகையில் ஒரு திரைப்படம் கண்டிப்பாக இருக்கும். அப்படி தான் மதுவுக்கும் ‘ரோஜா’ திரைப்படம். மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிக்பெரிய வெற்றியை பெற்று மதுவின் பெயரையும் முகத்தையும் வெளிக்கொண்டு வர உத்தரவு செய்தது என்றே கூறலாம்.
இந்த படத்தில் நடித்ததன் மூலம் தான் மதுவுக்கு தமிழ், ஹிந்தி மொழிகளில் பட வாய்ப்புகள் வர தொடங்கியது என்றே சொல்லலாம். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை மது மணிரத்னம் பற்றி பேசியுள்ளார். பேட்டியில் பேசிய மது ” ரோஜா படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்னதுடன் என்னால் நடிப்பை தொடர முடியவில்லை.
மணி சார் எல்லோருடனும் நன்றாக பழகினார். அவருடன் தொடர்பில் இருக்க பலமுறை முயற்சித்தேன்.. செய்திகள் அனுப்பினேன். அவர் மீது எனக்கு மிகுந்த அபிமானமும் மரியாதையும் உண்டு. ரோஜா படத்திற்கு கிடைத்த வரவேற்பு என்னுடைய வாழ்வில் நான் மறக்கவே மாட்டேன். அந்த வரவேற்பு தான் நான் பட்ட வேதனைகளில் இருந்து எண்ணி மீட்டெடுத்தது.
மணிரத்னம் சார் அந்த அங்கீகாரத்திற்கும் பாராட்டுக்கும் தகுதியானவர். அப்போது சொல்ல முடியவில்லை. ஆனால் இப்போது சொல்கிறேன். எனக்கு அங்கீகாரம் தந்தவர் அவர் தான். அந்த பெருமைக்கு உரியவர். அவருடன் நான் நட்பை வளர்க்கவில்லை.. அவருடன் உறவை தொடரவில்லை.. அதனால்தான் அடுத்தடுத்த படங்களில் என்னை அவர் நடிக்க வைக்கவில்லை வாய்ப்பு வழங்கவில்லை என்று நினைக்கிறேன்” எனவும் நடிகை மது தெரிவித்துள்ளார். மது கடைசியாக சகுந்தலம் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…