தன்னை விட அதிகம் வயது கொண்ட ஹிந்தி நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட மாதவன்!

Madhavan - juhi Chawla

இந்தி நடிகை ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்வதை லட்சியமாக கொண்டிருந்தேன் என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் “அலைபாயுதே” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாதவன், ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். அதற்கு காரணம் அவர் தொடர்ந்து காதல் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அந்த வரிசையில், என்னவளே, மின்னலே, டும் டும் டும் உள்ளிட்ட படங்கள் அடங்கும்.

இதையடுத்து, தமிழில் காதல் படங்கள் மட்டுமே கிடைத்ததால் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் மாதவன், தற்பொழுது, ‘தி ரயில்வே மென்’ என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

அந்த வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ள நிலையில், அதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மாதவன், பிரபல ஹிந்தி நடிகையை திருமணம் செய்து கொள்ளும் ஆசை குறித்து முதல்முறையாக பேசினார்.

இது குறித்து சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 1988-ல் ரிலீசான ‘கயாமத் சே கயாமத் தக்’ படத்தை பார்த்ததால் ஜூஹி சாவ்லா மேல் ஒரு ஈர்ப்பு வந்ததாகவும், அவரை மணம்முடிக்க வேண்டும் என்ற ஆசையை தாயாரிடம் கூறியதாகவும் மாதவன் தெரிவித்தார்.

கண்ணீர் விட்டு கதறல்! மனிஷா யாதவை டார்ச்சர் செய்த பிரபல இயக்குனர்?

இதில் சுவாரிஸ்யம் என்னவென்றால், நடிகர் மாதவனை விட ஜூஹி சாவ்லா 3 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல், தி ரயில்வே மென் வெப் சீரிஸில் ஜூஹி சாவ்லா நடித்திருக்கிறார். ஆனால், மாதனவனால் ஜூஹியுடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை, ஜூஹி நடிக்கும் காட்சிகள் முடிந்த பின்னரே மாதவனின் காட்சி படமாக்கப்பட்டது இந்த தகவலையும் ஒரே கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்