இயக்குனர் விகாஸ் பாஹ்ல் இயக்கியுள்ள ‘ஷைத்தான்’ என்ற ஹாரர் திரில்லர் திரைப்படத்தில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், கோலிவுட் நடிகை ஜோதிகா மற்றும் ஆர் மாதவன் நடித்துள்ள இப்படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் பேயாக குஜராத்தி நடிகை ஜான்கி போடிவாலா நடித்துள்ளார்.
படத்தில், ஜான்கி போடிவாலா அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகாவுக்கு மகளாக நடித்துள்ளார். இதுவரை இல்லாமல், ஒரு ஹாரர் திரைப்படத்தில் நடிகர் மாதவன் நெகடிவ் ரோலில் கலக்கி உள்ளார். ட்ரைய்லர் முழுக்க ஹாரர் நிறைந்து காணப்படுகிறது. படத்தின் கதை சூனியம் மற்றும் வசீகரம் அடிப்படையாகக் கொண்டது.
அதாவது, அஜய் தேவ்கனும் ஜோதிகாவும் தங்கள் மகளுடன் வசிக்கும் அமைதியான வீட்டிற்குள் நடிகர் மாதவனின் கதாபாத்திரம் என்ட்ரி கொடுக்கும் பொழுது ஷைத்தானோட ஆட்டம் தொடங்குகிறது. ஜோதிகாவின் மகளை மாதவன் வசிய செய்து அவர் சொல்வதை செய்வது காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இது, ஷைத்தான் வாஷ் என்ற குஜராத்தி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மார்ச் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜியோ ஸ்டுடியோஸ், அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் வழங்கும் இந்தப் படத்தை தேவ்கன், ஜோதி தேஷ்பாண்டே, குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…
தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரை 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளில் மறைந்த காங்கிரஸ்…
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…