ஹாலிவுட்டில் களமிறங்கும் மாதவன், அஞ்சலி, அனுஸ்கா, ஷாலினி பாண்டே!!
தமிழ் சினிமாவின் சாக்லெட் பாயாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் மாதவன். இவர் தமிழிலிருந்து பிறகு ஹிந்திக்கு சென்று அங்கும் நல்ல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதே போல பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் தெரிந்த நடிகையாக உள்ளார் அனுஷ்கா, தமிழ் சினிமா நடிகை அஞ்சலி, ‘அர்ஜூன் ரெட்டி’ பட நடிகை ஷாலினி பாண்டே ஆகியோர் தற்போது புதிதாக ஓர் படத்தில் நடிக்க உள்ளனர்.
இந்த படம் அமெரிக்காவில் ஹாலிவுட் படமாக தயாராக உள்ளது. இந்த படத்தை ஹேமந்த்மதுக்கர் என்பவர் இயக்க உள்ளார். கோனா வெங்கட் தயாரிிக்க உள்ளார். இந்த படம் இந்த வருடத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.