ஒரு காலகட்டத்தில் தமிழில் கலக்கி வந்த ஜோதிகா 2006 ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகி விட்டார் என்றே கூறலாம். திருமணத்திற்கு பிறகு ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் தனக்கு ஏற்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே ஜோதிகா நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான உடன் பிறப்பே திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ஒரு சில நல்ல கதைகளை கொண்ட படங்களில் மட்டும் ஜோதிகா நடித்து வருகிறார்.
இதையும் படியுங்களேன்- இந்த பிக் பாஸ் சீசன் களைகட்ட போகுது.! மாஸ் என்ட்ரி கொடுக்கும் ஜி.பி.முத்து.!
ஜோதிகா ஆரம்ப காலத்தில் எவ்வளவு அழகாக இருந்தாரோ அதைப்போல இப்போதும் அழகு குறையாமல் அதே அழகுடன் இருக்கிறார். மேலும், ஆரம்ப காலத்தில் ஜோதிகா கொஞ்சம் கொளு கொளுவென்று இருப்பாராம். அவரது தாயார் கூட எப்போதும் சிம்ரனுடன் ஒப்பிட்டு பேசுவார் என்றும், ஆனாலும் தான் உண்பதை மட்டும் நிறுத்த மாட்டேன் என்றும் ஒருமுறை விளையாட்டாக ஒரு பேட்டியில் ஜோதிகா கூறியிருந்தார்.
ஆனால் தற்போது தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலும் உடல் ஆரோக்கியத்திலும் ஜோதிகா தனி கவனம் செலுத்தி வருகிறாராம். அதற்கான உடற்பயிற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளாராம். இதில் மிகவும் ஸ்டிரிக்ட்டாகவும் இருக்கிறாராம். அவரது ட்ரைனருடன் ஜோதிகா இருக்கும் போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரை 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளில் மறைந்த காங்கிரஸ்…
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…