இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு நகரும் ‘மாநாடு’.! பிரமாண்ட செட்டாமே.!
சிம்புவின் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது சென்னையில் நடைபெற உள்ளதாகவும்,அதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சிம்பு தனது ஈஸ்வரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .
மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனான அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது பிரமாண்ட அரசியல் படமாக உருவாகும் இந்த மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது .அதற்காக சென்னை பிலிம் சிட்டியில் அரசியல் மாநாடு போன்ற பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் ,அதில் அனைத்து கதாபாத்திரங்களையும் வைத்து படமாக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் மாநாடு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு சிம்பு பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.