மாநாடு படத்திற்க்கு போட்டி போடும் தெலுங்கு நடிகர்கள்.! படக்குழுவின் வேறு மாஸ்டர் பிளான்.?!
தெலுங்கு நடிகர் ரவி தேஜா மாநாடு தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். ஹைதிராபாத்தில் தெலுங்கு திரை பிரபலங்களுக்கு மாநாடு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது.
மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி. இந்த செய்தியை நாமும் பல்வேறு விதங்களாக சொல்லிவிட்டோம். சிம்புவின் மாஸ் கம்பேக் திரைப்படம். வெங்கட் பிரபுவின் இன்னொரு மாஸ்டர் பீஸ் திரைப்படம். யுவனின் தெறிக்கவிடும் பின்னணி இசை, எஸ்.ஜே.சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பு என இன்னமும் மாநாடு ஏற்படுத்திய தாக்கம் ரசிகர்களிடம் குறையவில்லை என்பதே உண்மை.
இந்த திரைப்படம் மும்பை மற்றும் ஹைதிராபாத்தில் திரை முன்னணி பிரபலங்களுக்கு சிறப்பு காட்சியாக போட்டு காட்டப்பட்டுள்ளது. மாநாடு திரைப்படத்தை பார்த்த அனைவரும் வியந்துவிட்டனர். பலரும் பாராட்டியுள்ளனர்.
இதில், ஹைதிராபாத்தில் நடந்த சிறப்பு காட்சியில் தெலுங்கு முன்னணி நடிகர்களுள் ஒருவரான ரவி தேஜா பார்த்துள்ளார். அவர் மாநாடு தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக வெளிப்படையாக கூறியுள்ளாராம்.
ஆனால், மாநாடு படக்குழு தமிழில் ரிலீசுக்கு ரெடி செய்தது போலவே தெலுங்கிலும் டப்பிங், சென்சார் வேலைகள் வரை முடித்து லூப் என்கிற பெயரில் தெலுங்கில் டப்பிங் திரைப்படமாக வெளியிட திட்டமிட்டதாம். ஆனால், டப்பிங் செய்து வெளியிடுவதை விட, படத்தின் ரீமேக் உரிமையை விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என நினைத்த படக்குழு ரீமேக் உரிமையை விற்க காத்துக்கிடக்கின்றதாம்.
அதே போல, மும்பையில் சிறப்பு காட்சி காட்டப்பட்டதால் ஹிந்தியில் ரீமேக் உரிமை விற்கும் என நம்பிக்கையில் படக்குழு இருக்கிறதாம்.