எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??! – மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஹேப்பி டிவீட்.
நேற்று இரவு திடீரென மாநாடு திரைப்படம் சில தவிர்க்க முடியாத காரணத்தால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. ஆதலால், ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாநாடு தயாரிப்பாளர் டிவீட் போட்டதும், சிம்பு ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டேக்கே வந்துவிட்டது. பல ரசிகர்கள் கண்ணீர் விட்டுவிட்டனர்.
நேற்று இரவு, நள்ளிரவு வரை மாநாடு நிதி பிரச்சனை நீண்டு கொண்டிருந்தது. பெரும்பாலான இடங்களில் அதிகாலை ஷோ ரத்து செய்யப்பட்டது. கடைசியில் நள்ளிரவில் மாநாடு பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது. முதல் ஷோ 9 மணியில் இருந்துதான் ஆரம்பித்தது.
மாநாடு முதல் ஷோ பார்த்த அனைத்து ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தி வருகிறது.
இந்நிலையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அனைத்து பிரச்னையும் ஓரளவுக்கு முடிவுக்கு வந்து படமும் நல்ல விமர்சனங்களை பெற்றுவருவதால், ‘எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??! ‘ என்று சந்தோசமாக டிவீட் செய்துள்ளார்.
மேலும், தற்போது, ‘ நானே எதிர்பார்க்காத தடங்கல் மாநாடு படத்தின் இந்த தாமதம். நேற்று இரவு முழுக்க நிறைய நலம் விரும்பிகள் அழைத்தும் குறுந்தகவலிலும் தைரியமூட்டினர். நிறைய பேரின் அழைப்பை எடுக்க இயலவில்லை. அரசியல் பிரமுகர்கள் , சினிமா பிரபலங்கள், பத்திரிகை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..’ எனவும் தனது டிவீட் மூலம் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டிவீட் செய்துள்ளார்.
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
பொள்ளாச்சி : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…