மாநாடு மாஸ் ஹிட்.! ‘நான் வீழ்வென்று நினைத்தாயோ.!’- தயாரிப்பாளரின் மாஸ் டிவீட்.!

எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??! – மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஹேப்பி டிவீட்.
நேற்று இரவு திடீரென மாநாடு திரைப்படம் சில தவிர்க்க முடியாத காரணத்தால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. ஆதலால், ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாநாடு தயாரிப்பாளர் டிவீட் போட்டதும், சிம்பு ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டேக்கே வந்துவிட்டது. பல ரசிகர்கள் கண்ணீர் விட்டுவிட்டனர்.
நேற்று இரவு, நள்ளிரவு வரை மாநாடு நிதி பிரச்சனை நீண்டு கொண்டிருந்தது. பெரும்பாலான இடங்களில் அதிகாலை ஷோ ரத்து செய்யப்பட்டது. கடைசியில் நள்ளிரவில் மாநாடு பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது. முதல் ஷோ 9 மணியில் இருந்துதான் ஆரம்பித்தது.
மாநாடு முதல் ஷோ பார்த்த அனைத்து ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தி வருகிறது.
இந்நிலையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அனைத்து பிரச்னையும் ஓரளவுக்கு முடிவுக்கு வந்து படமும் நல்ல விமர்சனங்களை பெற்றுவருவதால், ‘எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??! ‘ என்று சந்தோசமாக டிவீட் செய்துள்ளார்.
மேலும், தற்போது, ‘ நானே எதிர்பார்க்காத தடங்கல் மாநாடு படத்தின் இந்த தாமதம். நேற்று இரவு முழுக்க நிறைய நலம் விரும்பிகள் அழைத்தும் குறுந்தகவலிலும் தைரியமூட்டினர். நிறைய பேரின் அழைப்பை எடுக்க இயலவில்லை. அரசியல் பிரமுகர்கள் , சினிமா பிரபலங்கள், பத்திரிகை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..’ எனவும் தனது டிவீட் மூலம் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டிவீட் செய்துள்ளார்.
எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம்.
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??! #maanaadu
— sureshkamatchi (@sureshkamatchi) November 25, 2021
நானே எதிர்பார்க்காத தடங்கல் #மாநாடு படத்தின் இந்த தாமதம். நேற்று இரவு முழுக்க நிறைய நலம் விரும்பிகள் அழைத்தும் குறுந்தகவலிலும் தைரியமூட்டினர். நிறைய பேரின் அழைப்பை எடுக்க இயலவில்லை. அரசியல் பிரமுகர்கள் , சினிமா பிரபலங்கள், பத்திரிகை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..
— sureshkamatchi (@sureshkamatchi) November 25, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
காஷ்மீர் தாக்குதல்: பயங்கரவாதி ஹாசிம் மூஸா முன்னாள் பாரா கமாண்டோ.! அதிர்ச்சி தகவல்..,
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025