சிம்பு விரும்பிய படி தெலுங்கில் ரிலீஸ் ஆகுமா மாநாடு?! அல்லது ரீமேக் ஆகுமா?
தெலுங்கிலும் டப் ஆகி மாநாடு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தெலுங்கில் வெளியாகவில்லை. மாநாடு திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகும் வாய்ப்பு உள்ளது.
கடந்த 25ஆம் தேதி தமிழ் சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்து வரும் திரைப்படம் மாநாடு. சிம்பு நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார். இந்த படம் தமிழில் வெளியான அதே நாளில் தெலுங்கிலும் வெளியாகும் என கூறப்பட்டு இந்ததது.
ஆனால், குறிப்பிட்ட தேதியில் தெலுங்கில் படம் வெளியாக வில்லை. தெலுங்கு டப்பிங் எல்லாம் எஸ்.ஜே.சூர்யா பேசியிருந்தார். ஆனால், படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகவில்லை. இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனால், தெலுங்கில் நல்ல மார்க்கெட் உருவாகும் என சிம்பு காத்திருந்த வேளையில் இந்த படம் தெலுங்கில் டப் செய்து ரிலீஸ் ஆகவில்லை என்பதே தற்போதைய நிலவரம்.
படம் வெளியாகி அனைத்து தரப்பிலும் நல்ல வரவேற்பு கிடைப்பதால் தற்போது மாநாடு திரைப்படத்தின் ரீமேக் உரிமைக்கு அதிக போட்டி தெலுங்கில் உருவாகியுள்ளது. அதன் காரணமாகத்தான் தெலுங்கு டப்பிங்கிற்கு முன்னுரிமை கொடுக்காமல், ரீமேக் உரிமை விற்பனைக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காத்துக்கொண்டிருக்கிறார்.