மாநாடு எனும் பிளாக் பஸ்டர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 நாட்கள் ஆகிவிட்டது. மேலும், இத்திரைப்படம் 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்துள்ளது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தற்போதைக்கு பிளாக் பஸ்டர் ஹிட் என்றால் அது அந்த 100 கோடி கிளப் தான். அந்த மைல் கல்லை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், கமல்ஹாசன் என உச்ச நட்சத்திரங்கள் எப்போது கடந்து 200, 300 கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.
அந்த இடத்தை நோக்கி வளர்ந்து வரும் இளம் நாயகர்கள் 100 கோடி கிளப்பில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என கடுமையாக உழைத்து வருகின்றனர். அதில், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், லாரன்ஸ் என ஒரு சிலர் இணைந்துவிட்டனர். ஆனால், இவர்களுக்கெல்லம் முன்னர் வந்து பெரிய ஹிட்டுக்காக காத்திருந்த சிலம்பரசன், தற்போது அந்த 100 கோடி கிளப்பில் மாநாடு எனும் பெரிய ஹிட்டோடு இணைந்துள்ளார்.
இன்றுடன் மாநாடு திரைப்படம் ரிலீஸ் ஆகி 25 நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மாநாடு திரைப்படம் தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 58.75 கோடி வசூல் செய்துள்ளது. மற்ற இட வசூல், சாட்டிலைட் உரிமம், என அனைத்தும் சேர்த்து 100 கோடி கிளப்பில் நீண்ட வருட இடைவெளிக்கு பிறகு இணைந்தார் சிலம்பரசன்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…