மீண்டும் கதை கூற தயாராகும் விஜய் சேதுபதி.! வெகுநாட்கள் கழித்து திரைக்கு தயாரான மாமனிதன்.!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தின் டீசரை படத்தின் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெகு நாட்களாக பெட்டிக்குள் முடங்கி இருந்த இருக்கும் திரைப்படம் மாமனிதன். இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இருக்கிறார்.
படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். காயத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் 2019லேயே தயாராக தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட 2 வருடங்களாக இந்த திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் போல படத்தின் இயக்குனர், நடிகர்கள் கூட எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஒரு வழியாக படத்தின் டீசரை தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். அதில் ஆட்டோ டிரைவர் ராதாகிருஷ்ணனாக விஜய் சேதுபதி வருகிறார். அவரது மனைவியாக காயத்ரி நடித்துள்ளார். படத்தின் கதைக்களம் கிராமத்து பின்னணியில் அமைத்துள்ளது போல காட்டப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
Happy to present you the teaser of #MaaManithan ???? Hope you all like it! ❤️
▶️ https://t.co/cKgd9S6Wms @VijaySethuOffl #Ilaiyaraaja @seenuramasamy @YSRfilms @SGayathrie @mynnasukumar @sreekar_prasad @U1Records @DoneChannel1
— Raja yuvan (@thisisysr) December 6, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025