இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “மாமனிதன்”. இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படம் தயாராகி வெளியாகியிருந்தது. சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. அதன்பின் இந்த ஆண்டு படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ஆர்கே சுரேஷ் வாங்கி படம் மே 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார்.
அடுத்தாக சில காரணங்களால் படம் மே 20-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆர்கே சுரேஷ் அறிவித்துள்ளார். அதன்படி, மாமனிதன் திரைப்படம் வரும் ஜூன் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள், கோபத்துடன் எத்தனை நாட்கள் தான் நங்கள் படத்தை பார்க்க காத்திருப்பது எங்களுக்கு ஏமாற்றமாக உள்ளது என கருத்துக்களை கூறிவருகிறார்கள். இந்த படத்திற்கு இளையராஜா யுவன் இணைந்து இசையமைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஆர்கே சுரேஷ் வெளியிட்டுள்ள ட்வீட்டில் ” மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதியை மே 20 ஆம் தேதியிலிருந்து ஜூன் 24 ஆம் தேதிக்கு மாற்றியிருக்கிறது ஸ்டுடியோ9 திரைப்படம் . தமிழகம் முழுவதும் குறைந்தபட்சம் 400 திரையரங்குகளை நடத்த மாமனிதன் தகுதியானவர். திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அனைவரிடமும் எங்கள் மனப்பூர்வமான மன்னிப்பு” என பதிவிட்டுள்ளார்.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…