யுவன் ஷங்கர் ராஜாவுக்கு எதிராக பிரெஸ் மீட்?! என்ன நடந்தது மாமனிதன் படபிடிப்பில்??

Default Image

மாமனிதன் படத்தில் பணியாற்றிய சில டெக்னீஷியன்களுக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளதாம். அதன் காரணமாக சீனு ராமசாமி தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு எதிராக பிரெஸ் மீட் வைக்கலாமா என யோசனையில் இருக்கிறாராம்.

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் தயாரான திரைப்படங்கள் இடம் பொருள் ஏவல், மாமனிதன். அதில் மாமனிதன் திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்து உள்ளார்.

ஏற்கனவே சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல் திரைப்படம் வருடக்கணக்கில் திரைக்கு வர காத்திருக்கிறது. அந்த வரிசையில் மாமனிதனும் இணைந்துவிடுமோ என ரசிகர்கள் பயந்து போய் உள்ளனர்.

இதற்கிடையில் புது பிரச்சனை ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது, மாமனிதன் படத்தில் பணியாற்றிய சில டெக்னீஷியன்களுக்கு இன்னும் சம்பளம் போய் சேரவில்லையாம். சம்பந்தப்பட்ட டெக்னீஷியன்கள் சீனு ராமசாமியிடம் கேட்டு வருகிறார்களாம்.

ஆனால், தயாரிப்பு தரப்பான யுவன் தரப்பில் இருந்து இதற்கான எந்த பதிலும் கிடைக்கவில்லையாம். அதனால், பொறுமை இழந்த இயக்குனர் சீனு ராமசாமி, யுவன் சங்கர் ராஜாவுக்கு எதிராக பிரெஸ் மீட் வைத்து அனைத்தையும் பொதுவெளியில் சொல்லி விடலாமா என யோசித்து வருகிறாராம். ஆனால், இளையராஜா மீது வைத்திருக்கும் மரியாதை காரணமாக யுவன் ஷங்கர் ராஜா மீதான பிரெஸ் மீட் மீது யோசனையில் இருக்கிறாராம் சீனு ராமசாமி.

பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று? விரைவில் இதற்கு தீர்வு காணப்பட்டு மாமனிதன் திரைப்படம் திரையிலோ அல்லது OTT தளத்திலோ வெளியாகுமா அல்லது ஏதேனும் அதிகாரபூர்வ அறிவிப்பு வருகிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்