தந்தையுடன் போட்டோ கூட எடுக்க முடியவில்லை என வருத்தத்துடன் பகிர்ந்துள்ள பாடலாசிரியர் அருண் பாரதி!
தந்தை தினமான இன்று தன் தந்தையை நினைவு கூறும் வகையில் சமீபத்தில் தல அஜித் நடித்து வெளிவந்த விஸ்வாசம் படத்தில் டங்கா டங்கா டங்கா பாடலை எழுதிய பாடலாசிரியர் அருண் பாரதி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
தற்போது பிரபல எழுத்தாளர்,பாடலாசிரியர் என திரை உலகில் பயணித்து வருகிறார்.பல படங்களில் பணியாற்றி வரும் இவர் சிறுவயதில் மிகவும் வறுமையில் இருந்துள்ளார்.
அவரின் அப்பாவிற்கு போட்டோ ஸ்டுடியோவில் சென்று போட்டோ எடுக்க கூட பணம் இல்லாமல் இருந்துள்ளார்.இவர் அவரின் தந்தையுடன் போட்டோவே எடுத்தது இல்லையாம்.
அவரின் தந்தை மரணத்திற்கு பிறகு வங்கியில் விவசாயக்கடன் வாங்குவதர்காக அவர் தந்தை எடுத்து கொண்ட போட்டோ தான் அவர் கையிக்கு கிடைத்துள்ளது என்று உலக தந்தை தினமான இன்று மன வருத்தத்துடன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
https://twitter.com/ArunbharathiA/status/1140131055397044224
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.