ஒன்னு இல்ல இரண்டு இல்லை! மூன்று ஓடிடியில் வெளியாகும் ‘லவ்வர்’!!

manikandan lover

Lover OTT நடிகர் மணிகண்டன் நடிப்பில் இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் லவ்வர். இந்த திரைப்படத்தில்  ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, நிகிலா சங்கர், அருணாசலேஸ்வரன், பிந்து பாண்டு, கீதா பி. கைலாசம், ஹரிஷ் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.

READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்?

இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் நன்றாக இருந்த காரணத்தால் விமர்சன ரீதியாக மக்களுக்கு மத்தியில் பாராட்டை பெற்றது. இதற்கு முன்னதாக மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் படத்தின் அளவுக்கு லவ்வர் வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் கூட லவ்வர் ஒரு அளவுக்கு வெற்றியை கொடுத்து இருக்கிறது.

READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!

காதல் கதையம்சத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த லவ்வர் திரைப்படம் உலகம் முழுவதும் 23 கோடி வரை வசூல் செய்திருந்தது. தமிழகத்தில் மட்டும் 14 கோடி வசூல் செய்து இருந்தது. இருந்தாலும் படம் வெளியான சமயத்தில் படம் பார்க்க பலரும் தவறினார்கள் என்று கூட கூறலாம். அவர்கள் எல்லாம் படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்தார்கள்.

read more- விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் வேதனை!

அப்படி காத்திருந்தவர்களுக்காக தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, லவ்வர் திரைப்படம் வரும் மார்ச் மாதம் 27-ஆம் தேதி ஹாட்ஸ்டார் – டெண்ட்கோட்டா – சிம்ப்ளி சவுத்  ஆகிய மூன்று ஓடிடி தளங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த தேதியில் லவ்வர் படத்தை நீங்கள் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்