ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் தொடர்ச்சியாக நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு ‘குட்நைட்’ திரைப்படம் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது.
இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் அடுத்ததாக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் லவ்வர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு, அருணாசலேஸ்வரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
அடேங்கப்பா! ‘சார்பட்டா பரம்பரை 2’ படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான டீசர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள்
இந்த திரைப்படம் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தை முன்னதாகவே பார்த்துள்ள விநியோகஸ்தர் படத்தை பாராட்டி தங்களுடைய விமர்சனத்தை கூறியுள்ளார். படத்தை பார்த்துள்ள அவர் ” தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” லவ்வர் படத்தை நான் சமீபத்தில் பார்த்தேன்.
படத்தில் அவ்வளவு அழகான காதல் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இன்றயை காலத்து இளைஞர்களை இந்த திரைப்படம் கண்டிப்பாக திரையரங்கிற்கு இழுக்கும். மணிகண்டனின் அசாதாரணமான நடிப்பு ஒவ்வொரு காட்சிகளையும் பார்க்க தூண்டுகிறது. சீன் ரோல்டன் ஆத்மார்த்தமான இசை. என்னுடைய வார்த்தைகளை பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் கண்டிப்பாக லவ்வர் படம் பிளாக் பஸ்டர்” எனவும் தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…