லவ் யூ தங்கமே…திருமணமாகி ஓராண்டு நிறைவு…இயக்குனர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு.!!
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் இதே தினத்தில் (ஜூன் 9) கடந்த ஆண்டு பெற்றோர்களின் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுடைய திருமணத்திற்கு பல பிரபலங்கள் வருகை தந்திருந்தார்கள். இவர்களுடைய திருமண காட்சிகள் கொண்ட வீடியோ ஒளிபரப்பு உரிமையை கூட நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தான் வாங்கி வைத்திருந்தது.
இன்னும் அந்த வீடியோ வெளியாகவில்லை. திருமணம் ஆனதை தொடர்ந்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலம் 2 குழந்தைகளைப் பெற்று கொண்டார்கள். இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ‘உயிர் ருத்ரோனில் என் சிவன்’ (Uyir Rudronil N Shivan), எனவும் மற்றோரு குழந்தைக்கு ‘உலக் தைவிக் என் சிவன்'(Ulag Dhaiveg N Shivan) என தங்களுடைய குழந்தைகளின் பெயர்களையும் அறிவித்தார்கள்.
இந்த நிலையில், இன்று நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்துகொண்டு ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணமாகி ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் கூறியதாவது ” நேற்று தான் எங்களுக்கு திருமணம் ஆனது போல இருக்கிறது. ஆனால், திடீரென்று எனது நண்பர்கள் “ஹேப்பி ஃபர்ஸ்ட் இயர் மேரேஜ் ஆனிவர்சரி” என்று எனக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள்.
View this post on Instagram
லவ் யூ தங்கமே எல்லா அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் எங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.இன்னும் வெகுதூரம் போகவேண்டும் நம் வாழ்வில் உள்ள அனைத்து நல்ல மனிதர்களின் அனைத்து நல்லெண்ணத்துடனும், சர்வ வல்லமையுள்ள கடவுளின் ஏராளமான ஆசீர்வாதங்களுடனும் எங்கள் திருமணத்தின் இரண்டாவது ஆண்டை எங்கள் வாழ்வின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களுடன் கொண்டு வருவோம் எங்கள் குழந்தைகள் உயிர் & உலகம்” என பதிவிட்டுள்ளார்.