லவ் டுடே பிரமாண்ட வெற்றி…தெலுங்கில் வெளியிட துடிக்கும் “வாரிசு” பட தயாரிப்பாளர்.!
தயாரிப்பாளர் தில் ராஜு லவ் டுடே திரைப்படத்தை தெலுங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்.
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள “லவ் டுடே” திரைப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, இவானா, விஜய் வரதராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்றய கால காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த திரைப்படம் தமிழில் மட்டும் திரையரங்குகளில் வெளியானது வெளியான 4 நாட்களில் இந்த திரைப்படம் 17 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் இன்னும் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்களேன்- காபி வித் காதல் வெற்றியா..? தோல்வியா..? வெளியான வசூல் விவரம்.!
இந்த நிலையில், படம் தமிழில் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது என்பதால் படத்தை பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு தெலுங்கில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. தில் ராஜு தான் விஜயின் வாரிசு படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.