முதல் நாளே வசூலை குவித்த ‘லவ் டுடே’.! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகளா..?
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள “லவ் டுடே” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, இவானா, விஜய் வரதராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்றய கால காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
இதையும் படியுங்களேன்- எனக்கு இன்று தான் தீபாவளி .. பட்டாசு பாடலுடன் உங்களுடன் கொண்டாட காத்திருக்கிறேன்.!- தமன் ட்வீட்..
படத்தில் வரும் காமெடி காட்சிகள், மற்றும் காதல் காட்சிகள் இன்றயை காலத்தில் உள்ள இளைஞர்கள் மட்டுமின்றி பலரையும் ஈர்த்தியுள்ளது. விமர்சன ரீதியாகவும் படம் ஒரு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், வசூல் ரீதியாகவும் மறுபக்கம் நல்ல ஓப்பனிங்க் கிடைத்துள்ளது.
அதன்படி, இந்த திரைப்படம் வெளியான முதலில் நாளில் மட்டும் தமிழகத்தில் 4-லிருந்து 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.