5YearsOf96 : காதலே காதலே…மனதை கலங்க வைத்த ராம் -ஜானு! ’96’ படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு!

ஒரு சில காதல் திரைப்படங்கள் தான் மக்கள் மனதில் தாக்கத்தை கொடுத்து உருக வைக்கும் வகையில் இருக்கும். அப்படி ஒரு திரைப்படம் தான் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி , த்ரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான 96. இந்த திரைப்படம் இப்போது பார்த்தால் கூட கண்டிப்பாக படத்தில் வரும் காதல் காட்சிகள் கண்கலங்க வைக்கும் என்றே சொல்லலாம். ராம் -ஜானு இந்த காதல் ஸ்டோரிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்றே சொல்லலாம்.
இந்த படத்தில் கௌரி ஜி. கிஷன், வர்ஷா பொல்லம்மா, தேவதர்ஷினி, நியாதி கடம்பி, ஜனகராஜ், பகவதி பெருமாள், ஆதித்ய பாஸ்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தில் வரும் காதல் காட்சிகள் அப்படியே நம்முடைய வாழ்க்கையில் பள்ளிப்பருவத்தில் நடந்ததை அப்படியே இயக்குனர் பிரேம்குமார் காட்டியிருப்பார்.
அதேபோல, இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற, பாடல்கள் எல்லாம் இளைஞர்களின் மனதில் தாக்கத்தை உண்டு செய்தது. 18 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பல கோடி வசூலை அள்ளி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதே நாளில் (அக்டோபர் 4) கடந்த 2018 ஆம் ஆண்டு தான் இந்த திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. எதிர்பார்த்ததைப் போல படம் அருமையாக இருந்த காரணத்தினால் மிகப் பெரிய ஹிட்டானது.
இந்த நிலையில், இந்த திரைப்படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவலை தற்போது பார்க்கலாம் . அதன்படி 18 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 96 திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் இதுவரை எத்தனையோ படங்கள் வந்திருக்கிறது ஆனால், 96 படம் எப்போதுமே அவர்கள் இருவருக்கும் ஸ்பெஷலான படம் தான்.
லேட்டஸ்ட் செய்திகள்
சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!
February 25, 2025
AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!
February 25, 2025
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025