ரசிகர்களின் அன்பு எல்லை மீறி விடுகிறது : நடிகை டாப்ஸி
நடிகை டாப்ஸி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா-2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், நான் சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தேன் நான் பிரபலமாக இருப்பது அவர்களுக்கு புரியவில்லை. நான் நடிகையாவதற்கு முன்னர் தோழிகளுடன் சாலைகளில் நடந்து செல்வேன். ஹோட்டல்களை தேடி சென்று சாப்பிடுவேன்.
ஆனால், தற்போது அப்படி போகவில்லை. ரசிகர்கள் என்மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்கள். அந்த அன்பு சில நேரங்களில் எல்லை மீறி விடுகிறது. பொது இடங்களில் அவர்கள் காட்டும் அன்பினால் எனக்கு சிக்கல் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.