இயக்குனர் அஹம்மத் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு (2023) செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் இறைவன். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படத்தில் ராகுல் போஸ், நயன்தாரா, நரேன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தின் டிரைலர் மற்றும் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி, படம் ஆரம்பிக்கும் போதிலிருந்தே படப்பிடிப்பு தளத்தில் லீக் ஆன புகைப்படங்கள் உள்ளிட்டவை பார்த்தவுடன் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது.
ஆனால், அதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு படத்தின் டிரைலர் மற்றும் படத்தின் அப்டேட்டுகள் வெளியாக வெளியாக படத்தை பார்க்கும் ஆர்வமும் திரில்லர் ரசிகர்களுக்கு அதிகமானது என்றே கூறலாம். ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இருந்ததா? என்று கேட்டால் இல்லை என்றே கூறலாம். படத்தைப் பார்த்த பலருமே எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை சற்று மோசமாக தான் இருக்கிறது எனவும் கூறி வருகிறார்கள்.
இதற்கிடையில் இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆக இருந்ததாகவும், ஒருவரால் தான் படம் ரிலீஸ் ஆகா தாமதமாகிவிட்டது என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டே படம் வெளியாகவேண்டியதாம் படத்தின் இசையமைப்பாளரான யுவன் படத்தினுடைய பின்னணி இசையை கொடுக்கவே இல்லையாம்.
இதன் காரணமாகத்தான் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் இந்த ஆண்டு ரிலீஸ் ஆனதாம். மேலும் ஜெயம் ரவிக்கு மார்க்கெட் இப்போது நன்றாக இருப்பதன் காரணமாக இறைவன் திரைப்படம் வசூல் ரீதியாக ஒரு அளவுக்கு நல்ல வசூலை ஈட்டி வருகிறது. குறிப்பாக படம் வெளியான இரண்டு நாட்களில் 7 கோடி வரை கோடி வசூல் செய்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…