ப்ராஜெக்ட் கே-ல் வில்லனாக களமிறங்கும் ஆண்டவர்.! இதற்கு முன் இத்தனை படங்களா?

kamal hassan

இந்திய சினிமாவின் உலக நாயகன் என்ற அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் ‘விக்ரம்’ திரைப்பட வெற்றிக்குப் பிறகு பிஸியாகிவிட்டார். பல்துறை திறமை கொண்ட இவர் வித்தியாசமான படங்களை வழங்கி ரசிகர்கள் மனதை கொள்ளயடித்துவிட்டார்.

kamal haasan vikram
kamal haasan vikram [Image Source : File Image]

தற்போது, அவர் பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மெகா-பட்ஜெட் படமான ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் கமல்ஹாசன் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு சுவாரஸ்யமான டீஸருடன் வெளியிடப்பட்டுள்ளது.

 

நீண்ட நாட்கள் கழித்து இந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறராம். இந்நிலையில், இதற்கு முன்னதாக அவர் வில்லனாக கலக்கிய கதாபாத்திரங்களை ஒரு பார்வை பார்க்கலாம்.

தசாவதாரம்:

Dasavathaaram
Dasavathaaram [Image- YouTube RCM promo]

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘தசாவதாரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் 10 விதமான வேடங்களில் நடித்தார். இப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோ மற்றும் வில்லன் ஆகிய இரு வேடங்களில் நடித்திருந்தாலும், எட்டு வெவ்வேறு துணை வேடங்களில் நடித்திருந்தாலும், அதில் ஃபெட்சராக கமல் நடித்த வில்லன் பாத்திரம் ஒரு முக்கிய கவனம் ஈர்த்தது.

இந்தியன்:

indian
indian [Image- Scroll.in]

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘இந்தியன்’ இப்படத்தில் கமல், ஊழலுக்கு எதிராக போராடும் வில்லன் தாதாவாக கலக்கினார். கமல்ஹாசனின் இதுவரை இல்லாத கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்பொது, வெளியீட்டுக்குத் தயாராகி வரும் படத்தின் இரண்டாம் பாகம், அதை விட பத்து மடங்கு பெரியதாக இருக்கும்.

ஆளவந்தான்:

Aalavandhan
Aalavandhan [Image- imdb]

சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ‘ஆளவந்தான்’ படத்தில் கமல்ஹாசன் இரட்டை சகோதரனாக நடித்திருந்தார். படுத்தில் அவர் ஹீரோ மற்றும் வில்லன் வேடங்களில் கலக்கினார். கமல்ஹாசன் எழுதிய ‘தாயம்’ நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், வெவ்வேறு கொள்கைகளைப் பின்பற்றும் இரட்டை சகோதரர்களின் மோதலைப் பற்றியது.

சிகப்பு ரோஜாக்கள்:

Sigappu Rojakkal
Sigappu Rojakkal [Image- YouTube RCM promo]

பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘சிகப்பு ரோஜாக்கள்’ என்ற உளவியல் த்ரில்லர் திரைப்படத்தில் கமல்ஹாசன் ஒரு சைக்கோ கொலையாளியாக எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்தார்.  1978 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது, மேலும் கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்று தந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்