எனது சிரிப்பை பார்த்து ‘துணிவு’ ரிசல்ட் தெரிந்து கொள்ளுங்கள்.. போட்டோவுடன் அப்டேட் கூறிய ஜிப்ரான்.!
அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்து வருகிறது. நாளுக்கு நாள் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “சில்லா சில்லா” நவம்பர்- 14 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் சமீபத்தில் ஒரு அப்டேட் ஒன்றை கொடுத்திருந்தார். அது என்னவென்றால், துணிவு படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ என தொடங்கும் அந்த பாடலை வைசாக் எழுதியுள்ளதாகவும், அப்பாடலை அனிருத் பாடியுள்ளதாகவும் அறிவித்திருந்தார். எனவே அந்த பாடலை கேட்க, அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்வீட்டர் பக்கத்தில் எச்.வினோத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியீட்டு சூப்பரான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்களேன்-அவன் என்ன ‘லவ்’பண்றதே எனக்கு பிடிக்கும்…காதல் சீக்ரெட்டை உளறிக்கொட்டிய சீரியல் நடிகை.!
இது தொடர்பாக அவர் டிவிட்டரில் பதிவிட்டிருப்பது “என்னுடைய இயக்குனர் எச்.வினோத் பரபரப்பான ஷெட்யூலுக்குப் பின் ஒரு இசை விவாதம் மற்றும் எனது புன்னகையே படத்தைப் பற்றிய அனைத்தையும் சொல்லிவிடும்” என பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் படத்தின் பின்னை இசை வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக தெரிகிறது.
Catching up for a musical discussion after my director’s hectic schedule and my smile tells everything about the film
PS: Yes, he is very tall ???? #HVinoth #Thunivu pic.twitter.com/jOKEAunepT
— Ghibran (@GhibranOfficial) November 10, 2022