பல நாள் ஆசை…அந்த கனவு நிறைவேறிவிட்டது…நடிகை ஜான்வி கபூர் நெகிழ்ச்சி.!
நடிகை ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் அவருடைய 30-வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதற்கான அதிகார்பூர்வ அறிவிப்பை படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன்பு அசத்தலான போஸ்டர் ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில், ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடிப்பது குறித்து பேசிய ஜான்வி கபூர் ” இதுதொடர்பாக பேசிய அவர், “ஜூனியர் என்.டி.ஆருடன் நடிக்கபோகும் நாட்கள் எப்போது வரும் என மிகவும் ஆவலுடன் காத்துள்ளேன். அவருடன் நடிப்பது எனக்கு ஒரு பெரிய கனவாக இருந்தது.
நான் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை தொடர்ந்து மீண்டும், மீண்டும் பார்த்தேன். அவருடன் நடிக்கவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. இதற்கு முன்பே ஒவ்வொரு பேட்டியிலும் அவருடன் கண்டிப்பாக இணைந்து வேலை செய்ய வேண்டும் என்று சொல்வேன்.
அவருடன் நடிக்கவேண்டும் என்பது அதுமட்டுமில்லை. ஜூனியர் என்.டி.ஆருடன் நடிக்க வேண்டும் என்று பிரார்த்தனை எல்லாம் கூட செய்திருக்கிறேன்” என ஜானவி கபூர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். மேலும் நடிகை ஜான்வி கபூர் Mr. & Mrs. Mahi எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.