திருப்பூரை சேர்ந்தவர் யாஷிகா என்ற ஷீலாஜெயராணி . இவர் நடிகர் விமல் நடித்த மன்னர் வகையறா என்ற படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார்.மேலும் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.இந்நிலையில் சென்னையில் வடபழனியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.
யாஷிகா_விற்கு பெரம்பூரைச் சேர்ந்த அரவிந்த் என்ற மோகன்பாபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. திருமணம் செய்து கொள்ளாமலே இருவரும் கடந்த நான்கு மாதங்களாக பெரம்பலூர் G.K.M காலனியில் தங்கியிருந்தனர்.
இதையடுத்து மூன்று நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக யாஷிகா உடன் கோபித்துக்கொண்டு மோகன்பாபு தன்னை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது . காதலன் தனிமையில் தவிக்க விட்டு சென்றதால் யாஷிகா தற்கொலை செய்து கொண்டார். திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி என் காதலனுக்கு தக்க தண்டனை பெற்றுத் தருமாறு உயிர்விடும் முன் வாட்ஸ்அப்பில் அவரது தாயாருக்கு யாஷிகா தகவல் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.