லோகேஷ் கனகராஜ் : ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்குவதால் அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜ் தவறவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்குவதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கப்படவுள்ளது. இந்த படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜுக்கு சமீபத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்ததாம்.
இயக்குனர் சுதா கொங்காராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்திஷ்வரன் ஒரு படத்தை இயக்கவுள்ளாராம். அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க தான் லோகேஷ் கனகராஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். படத்தின் கதையை கேட்டதும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரொம்பவே பிடித்துவிட்டதாம்.
ஆனால், கூலி படத்தில் பிசியாக இருப்பதால் அதனை முடித்த பிறகு செய்யலாமா என்பது போல லோகேஷ் கனகராஜ் கேட்டாராம். அதற்கு கீர்த்திஷ்வரன் இல்லை இந்த படத்தை இப்போதே எடுத்தால் தான் சரியாக இருக்கும் என்று கூறினாராம். பிறகு தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து நாணி இந்த படத்தில் நடித்தால் சரியாக இருக்கும் அவரிடம் கால்ஷீட் வாங்கி தருகிறோம் அவரை வைத்து எடுங்கள் என்று கூறினார்களாம்.
அதற்கு, கீர்த்திஷ்வரன் இல்லை இல்லை இந்த கதையை வளர்ந்து வரும் ஒரு புது முக ஹீரோ செய்தால் மட்டும் தான் சரியாக இருக்கும் என்று கூறினாராம். பிறகு தான், இந்த படத்தை பற்றியே பேச்சு வார்த்தை பிரதீப் ரங்கநாதனிடன் வந்ததாம். அவரும் கதையை கேட்டுவிட்டு கதை நன்றாக இருக்கிறது படத்தில் நான் நடிக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.
இந்த படத்தில் ஹீரோயினாக பிரேமலு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான மமிதா பைஜூ நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்து இருந்தால் கண்டிப்பாக நடிகராகவும் அடுத்ததாக லோகேஷ் கனகராஜுக்கு பட வாய்ப்புகள் குவிந்து இருக்கும். ஆனால், லோகேஷ் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. விரைவில் கீர்த்திஷ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…