Categories: சினிமா

ரஜினி -கமல் சந்திப்பு.! நெகிழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் ட்வீட்.?!

Published by
பால முருகன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.  விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால், படக்குழு தீவிரமான ப்ரோமோஷன் பணியில் களமிறங்கியுள்ளது.

 

இந்த நிலையில், நேற்று  சென்னை போயஸ் கார்டன் வீட்டில் ரஜினி காந்தை  நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மகேந்திரன் ஆகியோர்  சந்தித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி ,கமல் இருவரும் எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவர்க்கும் தெரியும். இவர்களின் நட்பை பார்த்து வியந்த லோகேஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் “நன்றி! கமல் சார், ரஜினி சார். என்ன ஒரு நட்பு. இது எனக்கு ஊக்கமளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

1 hour ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

2 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

3 hours ago