“2 மாத உழைப்பு போச்சு”…லீக்கான கூலி காட்சியால் லோகேஷ் கனகராஜ் வேதனை!!
கூலி படத்தின் லீக்கான காட்சியால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மிகவும் வேதனையுடன் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை : ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு கடினமான வேலை என்பது படம் எடுக்கும் இயக்குநர்களுக்கும், படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்குத் தான் தெரியும். பல விஷயங்களை யோசித்து முழு படமாக எடுத்து மக்களுக்குக் கொடுக்க இயக்குநர்கள் அந்த அளவுக்கு மெனக்கெடுகிறார்கள்.
அதைப்போல, படம் வெளியாகும் போது தான் மக்கள் அனைத்தையும் சர்ப்ரைஸாக பார்க்கவேண்டும் என லீக் ஆகா விடாமல் படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையாகக் கண்காணித்து வேலை செய்து வருகிறது. அப்படி இருந்தும், ஒரு சிலர் செய்யும் சில வேண்டாத செயல்கள் எப்படியோ படங்களின் காட்சிகள் லீக் ஆகி விடுகிறது.
அப்படி தான், ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தினுடைய முக்கிய காட்சி ஒன்று லீக் ஆகி இயக்குநர் லோகேஷ் கனகராஜை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்போது மிகவும் அருகிலிருந்து ஒருவர் படப்பிடிப்பை வீடியோ எடுத்து அந்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ மிகவும் வைரலாகி வந்த நிலையில், இவ்வளவு அருகில் ஒருவர் வீடியோ எடுத்திருக்கிறார் அவ்வளவு கவன சிதறலாக இருக்கிறீர்களா? என சன்பிக்ச்சர்ஸ் நிறுவனத்தை விமர்சித்து வந்தார்கள். லீக்கான காட்சியைப் பார்த்த ரசிகர்களுக்கே இவ்வளவு அதிர்ச்சியாக இருந்தால் படத்தைப் பார்த்து பார்த்து எடுத்து வரும் லோகேஷ் கனகராஜுக்கு எப்படி இருந்து இருக்கும்?
லீக்கான அந்த காட்சியால் லோகேஷ் கனகராஜ் ரொம்பவே உடைந்து போய்விட்டார். 2 மாதம் உழைப்பு போச்சு எனவும் வேதனையுடன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” ஒரு பதிவினால் பலரின் இரண்டு மாத உழைப்பு வீண் போனது.ஒட்டுமொத்த அனுபவத்தையும் கெடுக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி” எனக் கூறியுள்ளார்.

லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025