விஜய் படம் என்றாலே பிரச்சனை…லியோவில் ஆபாச வார்த்தை இருக்காது – லோகேஷ் கனகராஜ் பேட்டி!

leo - lokesh

விஜய் படம் என்றாலே சிறுசிறு பிரச்னை வருகிறது என்று செய்தியாளர்களுக்கு லோகேஷ் கனகராஜ் பேட்டி அளித்துள்ளார்.

லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘லியோ‘ திரைப்படம்  பல்வேறு பிரச்சனைகளை தாண்டி,  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நாளை ( அக்டோபர் 19-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், கெளதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைக்க இந்த திரைப்படத்தைசெவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

லியோ திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்துள்ளார். இந்த சந்திப்பின்போது பத்திரிகையாளர் எழுப்பும் கேள்விகளுக்கு லோகேஷ் பதிலளிக்கையில்,  விஜய் படம் என்றாலே சிறுசிறு பிரச்னை வருகிறது, முன்னதாக மாஸ்டர் படத்திற்கும் பிரச்சனை வந்தது.

முதல் நாள் வசூலில் ரஜினி-அஜித்தை ஓரங்கட்டுவாரா தளபதி விஜய்? லியோ சம்பவம் லோடிங்…

லியோவின் டிரெய்லர் மூலம் வந்த பிரச்னையை சரிசெய்தேன். லியோ திரைப்படத்தில் விஜய் பேசிய ஆபாச வசனம் நீக்கப்பட்டுள்ளது என்று கூறிஉள்ளார்.  மேலும், லியோ ட்ரைலரில் இருந்த ஆபாச வார்த்தை படத்தில் இருக்காது குழந்தைகள் படம் பார்ப்பதால் அந்த வார்த்தை நீக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த கெட்ட வார்த்தை பேசியதற்கு நான் தான் காரணம். படத்தின் கதைப்படி தேவை என்பதால், அந்த காட்சியில் ஆபாச வார்த்தை பயன்படுத்தப்படட்டது என்று விளக்கம் கொடுத்தார்.

இதனையடுத்து, இன்று காலை உதயநிதி போட்ட லியோ படம் LCU என்ற குறிப்பிட்டதற்கு பதிலளித்த லோகேஷ், அமைச்சர் உதயநிதி போட்ட பதிவுல LCU பக்கத்துல கவனிச்சீங்களா? கண்ணு அடிக்கிற எமோஜி இருக்கும். அதனால், அது உண்மையா பொய்யா என நாளைக்கு காலைலதான் தெரியவரும் உங்களுக்கு என்று கூறினார்.

லியோ படத்தை இணையதளங்களில் வெளியிட தடை – ஐகோர்ட் உத்தரவு

(LCU) லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் உருவாக நடிகர்களின் ஆதரவு தான் முக்கிய காரணம். மாஸ்டர் படத்திற்கு பிறகு எனக்கும் விஜய்க்குமான புரிதல் இன்னும் அதிகரித்துள்ளது. லியோ படம் உருவாக மாஸ்டர் திரைப்படம்தான் காரணம் என்றார். மேலும், லியோ 100% என்னுடைய படமாக இருக்கும் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்