லியோ படத்தில் செஞ்ச தப்ப இனிமே பண்ண மாட்டேன்! லோகேஷ் கனகராஜ்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ படத்தை இயக்கி இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக ஹிட் ஆகி இருந்தாலும் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம். இருந்தாலும் வசூல் ரீதியாக 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிக பெரிய பிளாக் பஸ்டர் ஆனது.
விமர்சன ரீதியாக பொறுத்தவரை படத்தின் இரண்டாவது பாதி சற்று சரியில்லை மெதுவாக செல்கிறது என்பது போல கூறிவந்தார்கள. இந்த விமர்சனத்தை தான் ஏற்றுக்கொள்ளவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். அவர் தற்போது உறியடி விஜய்குமார் நடித்துள்ள பைஃட்க்ளப் படத்தை வழங்குகிறார். இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்து கொண்ட போது தான் லியோ படம் பற்றி பேசியுள்ளார்.
பரபரப்பை கிளப்பிய அந்த மாதிரி வீடியோ! விளக்கம் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!
இது குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ் ” இனிமேல் ரிலீஸ் தேதி அறிவிக்காமல் படம் செய்யலாம் என்று நான் முடிவு எடுத்து இருக்கிறேன். கடைசியாக லியோ படத்தில் இருக்கும் பிரச்சனைகள் பற்றி அதாவது இரண்டாவது பாதி பற்றி பலரும் கூறியிருந்தார்கள். அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். இனிமேல் அந்த மாதிரி தப்பு எதுவும் நடந்துகொள்ள முடியாத அளவிற்கு நான் வேலை செய்யப்போகிறேன்.
இனிமேல் ரிலீஸ்தேதி பற்றி யோசிக்காமல் படம் செய்யவேண்டும். ரிலீஸ் தேதி என்பது நாம் கேட்டு வாங்குவது தான் இருந்தாலும் ஒரு பெரிய படத்தை 10 மாதத்திற்குள் எடுத்துமுடிக்கவேண்டும் என்றால் அதுவே ஒரு பெரிய அழுத்தமாக இருக்கும்.எனவே அவ்வளவு வேகமாக படம் எடுக்கவேண்டாம் என்று முடிவு எடுத்து இருக்கிறேன்” என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக லியோ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து அவருடைய 171-வது படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.